Years Experience
தமிழக வணிகர் சம்மேளனம் 2013-ல் நிறுவப்பட்டு, வணிகத்தை தொடங்க விரும்பும் தொழில் முனைவர்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு தேவையான அரசு அனுமதிகள், நிதி உதவிகள், காப்பீடுகள் போன்றவற்றைப் பெற்றுத் தருகிறது. வணிக வளர்ச்சி, ஏற்றுமதி–இறக்குமதி, மற்றும் தொழில் மேம்பாட்டில் வணிகர்களை ஊக்குவிக்கிறது.
இந்த அமைப்பின் பிரதான நோக்கம் வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுதல் அரசு மற்றும் வணிகர் இடையே உறவு பாலமாக திகழ்கிறது.
Call Us: 9941457075
நிறுவனர்
வணிக வரலாற்றில் ஓர் மைல்கல்லாய், தமிழக வணிகர் சம்மேளனம் 2018 முதல் மலேஷியா, மொரிசியஸ், இலங்கை போன்ற நாடுகளில் ஆண்டு தோறும் உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டை நடத்தி, தமிழ் வணிக உறவுகளையும் அந்நாட்டு வணிக அமைப்புகளையும் கௌரவித்து வருகிறது. இந்த மாநாட்டின் நிறுவனர் திரு. VRS சம்பத் அவர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சம்மேளனம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது. வேளச்சேரி தொகுதி செயலாளராக பணியை தொடங்கி, தலைமை செயற்குழு உறுப்பினராக சிறந்து today, தலைவராக பொறுப்பேற்று அமைப்பை பரப்பி வரும் திரு. தமிழ்செல்வம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிலையில், அமைப்பின் வளர்ச்சிக்காக திரு. தமிழ்செல்வம் தலைமையில், நம்மை வழி நடத்தும் இந்நேரத்தில், அனைவரும் கரம் கோர்த்து இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
தலைவர்
தமிழக வணிகர் சம்மேளனம் சாதி, சமய, மத, இன, சமுதாய வேறுபாடின்றி, சமூக பாகுபாடின்றி, சட்டபூர்வமாக வணிகம் மேற்கொள்ளும் அனைத்து வணிகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஒருங்கினைத்து ஒன்றே குலம் என்ற தாரக மந்திரத்தை கருத்தில் கொண்டு வணிகர்களுக்கு சட்டப்பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்யவும், வணிகர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும் தொடங்கப்பட்ட அமைப்பாகும். தன்னலமற்ற சேவையை வழங்க, தன்னார்வலர்கள், சமூக சேவைகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள், வணிகத்துறை வல்லுநர்கள் மற்றும் நெறியாளர்களின் வழிகாட்டுதல் மூலமாக அனைத்து வணிக பெருமக்களின் வாழ்வாதாரத்தை வசப்படுத்த தமிழக வணிகர் சம்மேளனம் தொடங்கப்பட்டது.




| ID | Name | Mobile | Business | Address | Photo | Signature | Status | Certificate | Visiting Card |
|---|
எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை, சந்தைப்படுத்தல், வணிக ஆலோசனை மற்றும் இணையதள வடிவமைப்பு சேவைகளை வழங்குகிறது.
ஆம், சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு வணிக மேம்பாட்டு ஆலோசனைகள் வழங்குகிறோம்.
கட்டணங்கள் வழங்கும் சேவையின் தன்மை மற்றும் திட்டத்தின் அளவைப் பொறுத்து மாறுபடும். மேலதிக விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.